ABOUT BANK EXAMS

DONT TOUCH PEN, ONLY MIND CALCULTIONS WITHIN 40 SECS.

SHANMUGAM IAS ACADEMY

SHANMUGAM IAS ACADEMY
REGULAR TEST GOOD RESULT

Tuesday, January 21, 2014

செரீனா புதிய சாதனை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 61-வது வெற்றியைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளார் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்.
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 3-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்லோவேகியாவின் டேனிலா ஹன்ட்சோவாவைத் தோற்கடித்தார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் அதிக ஆட்டங்களில் (61) வெற்றி பெற்றவர் என்ற சாதனையைப் படைத்தார். ஆஸ்திரேலிய வீராங்கனை மார்க்ரெட் கோர்ட் 60 போட்டிகளில் வெற்றி கண்டதே ஆஸ்திரேலிய ஓபனில் தனியொரு வீராங்கனையின் சாதனையாக இருந்தது. இப்போது அதை செரீனா முறியடித்துள்ளார்.
வெற்றி குறித்துப் பேசிய செரீனா, “இது கடினமான போட்டியாகும். டேனிலா மிகச்சிறந்த எதிராளி. அவரை வீழ்த்தியதில் மகிழ்ச்சியே” என்றார்.
1998 முதல் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடி வரும் செரீனா, மெல்போர்னில் அதிக போட்டிகளில் (69) விளையாடியவர் என்ற சாதனையை சகநாட்டவரான லின்ட்சே டேவன்போர்ட்டுடன் இப்போது பகிர்ந்து கொண்டுள்ளார். அடுத்த சுற்றில் விளையாடும்போது டேவன்போர்ட்டின் சாதனையை செரீனா முறியடிப்பார்.
செரீனா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செர்பியாவின் அனா இவானோவிச்சை சந்திக்கிறார். அனா இவானோவிச் தனது 3-வது சுற்றில் 6-7 (8), 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரைத் தோற்கடித்தார்.
உலகின் 4-ம் நிலை வீராங்கனையான சீனாவின் லீ நா, தனது 3-வது சுற்றில் கடும் போராட்டத்துக்குப் பிறகு 1-6, 7-6 (2), 6-3 என்ற செட்களில் செக்.குடியரசின் லூஸி சஃபரோவாவைத் தோற்கடித்தார். ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர், இத்தாலியின் பிளேவியா பென்னட்டா, ரஷியாவின் எக்டெரினா மகரோவா, கனடாவின் யூஜினி புச்சார்ட் ஆகியோரும் தங்களின் 3-வது சுற்றில் வெற்றி கண்டு 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
டேவிட் ஃபெரர் வெற்றி
ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் தனது 3-வது சுற்றில் 6-2, 7-6 (5), 6-2 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜெர்மி சார்டியை தோற்கடித்தார்.
இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடர்ந்து 14-வது முறையாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ஃபெரர். கடந்த ஆஸ்திரேலிய ஓபனில் அரையிறுதி வரை முன்னேறியவரான டேவிட் ஃபெரர் அடுத்த சுற்றில் ஜெர்மனியின் புளோரியன் மேயரை சந்திக்கிறார்.
செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் 6-4, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் போஸ்னியாவின் டேமிர் தும்கரையும், தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 3-6, 4-6, 6-3, 7-6 (5), 7-5 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ரோஜர் வேஸலினையும் தோற்கடித்தனர். இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி 7-5, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் சாம் கியூரியைத் தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

No comments: