அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி 4 ஏவுகணை ஒடிசா மாநிலத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
4000 கிலோ மீட்டர் தொலைவு அணு ஆயுதம் சுமந்து செல்லும் திறன் பெற்ற அக்னி-4 ஏவுகணை, இன்று காலை 10.52 மணியளவில் ஒடிசா கடற்கரைப் பகுதியில் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டதாக, சோதனை மைய இயக்குநர் எம்.வி.கே.வி. பிரசாத் தெரிவித்துள்ளார்.
அக்னி ஏவுகணையின் மூன்றாவது முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் சில தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment