ஸ்விட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெற உள்ள உலக பொருளாதார பேரவை (டபிள்யுஇஎப்) மாநாட்டில் இந்தியாவிலிருந்து 125 பேரடங்கிய குழு பங்கேற்க உள்ளது.
மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஆனந்த் சர்மா, கமல்நாத், பிரபுல் படேல், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திட்டக் குழு துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
தொழிலதிபர்கள் சைரஸ் மிஸ்திரி, முகேஷ் அம்பானி, அஸிம் பிரேம்ஜி, சுநீல் மித்தல், ஆதி கோத்ரெஜ் உள்லிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தொழிலதிபர்கள் குழு இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளது.
100 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் அதிகமான அரசு மற்றும் தொழிலதிபர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் மாநாட்டில் உரையாற்ற உள்ளனர்.
No comments:
Post a Comment