மதிப்புமிக்க பாரத் கௌரவ்
(இந்தியாவின் பெருமைக்குரியவர்) விருதுக்கு துபையில் வசிக்கும் இந்தியர் ஜான் ஐபே
(63) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய சர்வதேச நட்புறவு சங்கம் இவரை
இவ்விருதுக்கு தேர்வு செய்துள்ளது. டெல்லியில் வியாழக்கிழமை நடைபெறும் விழாவில்
ஜான் ஐபே, விருதை பெற்றுக்கொள்கிறார்.
கட்டுமானப்
பணி மேலாளரான ஜான் ஐபே, பஹ்ரைனில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்.
கடந்த 14 ஆண்டுகளாக சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 2006-ல் பஹ்ரைனின்
குடைபியா நகரில் 16 பேரை பலிகொண்ட தீ விபத்தில், உயிர் பிழைத்தவர்களுக்கு ஜான் ஐபே
உதவினார். ஆயத்த ஆடை தொழிற்சாலை ஒன்று திவால் ஆனபோது, அதில் பணியாற்றிய 800
தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் ஏற்படுத்தினார்.
பஹ்ரைனில்
ஏழை இந்திய தொழிலாளர் களுக்கு இலவச இன்சூரன்ஸ் திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு
தூண்டுகோலாக இருந்தார். இவ்விருதை அன்னை தெரசா, கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்,
நடிகர்கள் ஷம்மி கபூர், ராஜேஷ் கன்னா, தேவ் ஆனந்த் உள்ளிட்டோர் ஏற்கெனவே
பெற்றுள்ளனர். இவர்களுடன் தற்போது ஜான் ஐபேவும் இணைகிறார்.
No comments:
Post a Comment